Monday, December 25, 2023
Wednesday, December 20, 2023
Monday, December 18, 2023
Saturday, December 16, 2023
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | pallikattu sabarimalaiku lyrics Tamil
Pallikattu sabarimalaiku lyrics Tamil
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்… pallikattu sabarimalaiku lyrics Tamil
இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!
நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்
காவலனாய் இருப்பார்
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
சபரி பீடமே வந்திடுவார் சபரி
அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
#ayyappaswamy #tamildevotionalsongs #pallikattu #sabarimalai
Featured Posts
Gayatri Mantra in Tamil for All Gods
Gayatri Mantra in Tamil for All Gods Vinayagar Gayatri Mantra in Tamil வினாயகர் காயத்ரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி த...
Popular Posts
-
Aravish Quotes brings you quotes in English, Tamil and Hindi for all seasons. The quotes spreads the meanings of life, it reflects the im...
-
Aravish Quotes brings you quotes in English, Tamil and Hindi for all seasons. The quotes spreads the meanings of life, it reflects the impac...
-
வில்லாளி வீரன் ஐயா பாடல் வரிகள் வில்லாளி வீரன் ஐயா வீர மணிகண்டனையா பாடல் வரிகள் அல்லது (Villali Veeran Ayya Song Lyrics Tamil) சாமி ரொம்ப சி...